சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” செகண்ட் சிங்கிள் பாடல் அப்டேட்…

Must read

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் – ஏ.ஆர். ரஹ்மான் – சிம்பு ஆகிய மூவரும் இந்தப் படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

சிம்புவுக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த புதுவரவு ஷித்தி இத்னானி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மறக்குமா நெஞ்சம்’ என்று தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின், பத்து தல, வெந்து தணிந்தது காடு என்று அடுத்ததடுத்த படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன்.

செப்டம்பர் 15 ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிம்பு நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article