பெங்களூரு

நவ கர்னாடகா விஷன் 2025 என்னும் கர்னாடகா மாநில முன்னேற்ற திட்ட வரைவினை முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.

கர்னாடகாவில் இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசு கொண்டு வர உள்ள முன்னேற்ற திட்டங்களை குறித்து நவ கர்னாடகா விஷன் 2025 என்னும் வரைவு ஒன்றினை அமைத்துள்ளது.   கடந்த 2017ஆம் வருடம் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி ரேணுகா சிதம்பரம் தலைமையில் இதை வடிவமைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.  பல துறைகளிலும் ஆய்வு நடத்திய இந்தக் குழு இந்த திட்டத்தின் வரைவினை அரசுக்கு அளித்தது.

இதனை கர்னாடகா முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.   இது குறித்து அவர், “கர்னாடகா அனைத்து துறைகளிலும் முதலிடம் வகித்து வருகிறது.   இதற்காக நமது அரசு பெருமைப் படுகிறது. இந்த நவகர்னாடகா விஷன் 2025 மூலம் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களின் குறைகளும் விரைவில் தீர்க்கப்பட உள்ளது.

கடந்த தேர்தலின் போது இந்த அரசு 165 வாக்குறுதிகளை அளித்தோம் அவற்றில் 155 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.  சுதந்திரம் அடைந்து 70 வருடம் ஆகி உள்ள நிலையில் இது போல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.    இந்த நவகர்னாடகா விஷன் 2025 திட்டம் விவசாயம் மற்றும் உள்ள அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மின்சாரம், அரசமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, தகவல் துறை தொழில்நுட்பம், தொழில்துறை முன்னேற்றம்.  சுற்றுலாத்துறை, வேலைவாய்ப்புத் துறை,  கிராமப்புற மேம்பாடு,  சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் துறை,  கல்வி, நீதித்துறை,  சமூக நீதித்துறை உட்பட அனைத்திலும் கர்னாடகா தன்னிறைவு பெற்று முழு வளர்ச்சி அடையும்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.