பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்குச் செல்லும்போதெல்லாம், “இங்கே ஆட்சி சரியில்லை.. திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை.. “என்று ஒரே மாதிரி ரிக்கார்ட் பேச்சை பேசி வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரு – மைசூர் இரட்டை ரயில் பாதையை திறக்க வரும் மோடிக்கு அப்படி பேச வாய்ப்பளிக்காத வகையில் செக் வைத்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

அதாவது, இந்த ரயில் பாதைக்கான மொத்த செலவு 900 கோடி ரூபாயில் மாநில அரசு 590 கோடி ரூபாயை அளித்துள்ளது என்பதை, மோடி வருதற்கு முன்பே மாநிலம் முழுதும் விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி விட்டார்.

“இப்போது மோடி என்ன பேசப்போகிறார் பாவம்” என்று கிண்டலாக கேட்கிறார்கள் கர்நாடக காங்கரஸ்காரர்கள்.