கோவை:

மிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என்றெல்லாம் பேசிய பா.ஜ.க. தலைவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டிலேயே அமைதி பூங்காவாக விளங்குவது தமிழகம்தான். பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருக்கிறது. (பா.ஜ.க. ஆளும் ) உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நிலைமையை பாருங்கள். தமிழகத்தின் நிலை உங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, அதனால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

மேலும், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.