புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. வரும் 19ந்தேதி புறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 6வதுமுறையாக ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 22ந்தேதி புறப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் வரும் 19ந்தேதி பயணமாகிறார்கள் என நாசா ஏற்கனவே அறிவித்த நிலையில், . ஏற்கனவே ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 பயணம் 5 முறை தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்ட நிலை யில், ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6வது முறையாக பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களின் பயணம் வரும் 22ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா பங்குபெற்றுள்ள ஆக்ஸ்- 4 பயணம் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை (19ந்தேதி) சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்…