டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும் டெல்லிக்கு திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்தோனேசிய தீவுகளின் கிழக்கில் எரிமலை வெடித்ததில், வானத்தில் 10 கி.மீ உயரத்திற்கு கோபுரம் போல் சாம்பல் படர்ந்தது, இதனால் இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள், இன்று (ஜூன் 18) ரத்து செய்யப்பட்டன.
கிழக்கு சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,703 மீட்டர் உயர இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி, ஜூன் 17 அன்று வெடித்தது, அதிகாரிகள் அதன் எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தினர்.
இதையடுத்து இந்தோனேசியா செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா மட்டுமன்றி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமானங்கள் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான சேவையை ரத்து செய்துள்ளது.