பெங்களூரு

ரசு மற்றும் நீதிமன்ற பணிகளுக்கு சுருக்கெழுத்து பயிற்சி அவசியம் என சுருக்கெழுத்தாளர்கள் சந்தத் தலைவர் முரளிநாத் தெரிவித்துள்ளார்.

சர் ஐசக் பிட்மன் சுமார் 180 வருடங்களுக்கு முன்பு ஷார்ட் ஹேண்ட் என அழைக்கப்படும் சுருக்கெழுத்து முறையை கண்டு பிடித்தார்.   ஒரு காலத்தில் தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து கற்றுக் கொடுக்கப்படும் என்னும் பலகையுடன் பல பயிற்சி மையங்கள் இயங்கி வந்தன.    தற்போது கணினி உபயோகத்துக்கு வந்த உடன் அந்த பயிற்சி மையங்கள் காணாமல் போயின.

தற்போழுது சுருக்கெழுத்தாளர் சங்கம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வருகிறது.    பெங்களூரு நகரில் சுருக்கெழுத்துப் பயிற்சி இந்த சங்கத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப் படுகிறது.    தற்போது நாடெங்கும் சுமார் 100 சுருக்கெழுத்து பயிற்சி மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பயிற்சி மையத்தின் செயலாளர் முரளிநாத், “தற்போதும் சுருக்கெழுத்தாளர் தேவை கணிசமான அளவில் உள்ளது.   முக்கியமாக அரசுப் பணியில் அதுவும் நீதிமன்றப் பணிக்கு இது ஒரு நுழைவுச் சீட்டு போன்றதாகும்.   நீதிமன்றத்தில் மட்டுமின்றி வழக்கறிஞர் அலுவலகங்களிலும் சுருக்கெழுத்தாளர்களின் தேவை அதிகம் உள்ளது.

ஒவ்வொரு நீதிமன்ற தீர்ப்பும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்டவைகளாக உள்ளன.  அந்த தீர்ப்பை நீதிபதிகள் படிக்கும் போது சுருக்கெழுத்தாளர்களால் மட்டுமே உடனுக்குடன் ஒரு வரி விடாமல் குறிப்பெடுக முடியும்.    பல அரசு அலுவலகங்களில் சுருக்கெழுத்தாளர்களாக பணியில் நுழைந்தவர்கள் உதவி செயலர்கள் வரை பணிஉயர்வு பெற்றுள்ளனர்.

ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளரின் தற்போதைய குறைந்த பட்ச ஊதியம் ரு.25000 ஆக உள்ளது.    இந்த பயிற்சி பத்திரிகையாளர்களுக்கும் இன்றியமையாதது ஆகும்    இந்த பயிற்சியை முழுமையாகப் பெற இரண்டு வருடங்கள் போதுமானது.”    என தெரிவித்துள்ளார்