டோக்கியோ

லிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர்கள் தோல்வி அடைவதால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என அக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு தொடக்கத்திலேயே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு ஏற்பட்டது.   முதல் நாள் போட்டிகளில் எடை தூக்கும் பிரிவில் மிராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தை வென்ற செய்தியால் நாடே மகிழ்ந்தது.   ஆனால் அடுத்த நாளே மற்றொரு செய்தி நாட்டை வருத்தத்தில் ஆழ்த்தியது.

துப்பாக்கி சுடும் போட்டிகளில் 15 பேர் கொண்ட இந்தியக் குழுவினர் வெற்றி பெறுவார்கள் மற்றும் பதக்கங்களைக் குவிப்பார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.   இதுவரை இந்த குழுவில் சௌரப் சவுத்ரி மட்டுமே தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.   ஆயினும் அவர் தற்போது 7 ஆம் இடத்தில் உள்ளார்.  துப்பாக்கி சுடும் வீரர்கள் தகுதி சுற்றிலேயே தோல்வி அடைந்து வருவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   

இது குறித்து தேசிய துப்பாக்கி சுடுவோர் குழ் தலைவர் ரனிந்தர் சிங், “வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுடன் இல்லை என்பது உண்மையாகும்.  ஆனால் அதே வேளையில் அவர்களது  பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இதில் அதிக அளவில் பொறுப்புள்ளது.   இது போன்ற ஒரு முக்கியமான நேரத்தில் வீரர்களின் முழுத்திறமையையும்  வெளிப்படுத்த இயலாத பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.