விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஷெர்ஷா’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷ்ணுவர்தன், இந்தப் படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமாகிறார்.

இதில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருடன் கைரா அத்வானி, ஜாவின் ஜாஃப்ரி, ஷிவ் பண்டிட், பவன் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீவஸ்தவா, படத்தின் கதையை எழுதியுள்ளார்.

வெளியீட்டுக்குத் தயாரானநிலையில் கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘ஷெர்ஷா’ படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

அமேசான் ஓடிடி நிறுவனம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.