விடுதியில் மகிழ்ச்சியாக இருக்கோம்!: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள்

Must read

சென்னை:

சென்னை கூவத்தூர் அருகே இரு நட்டத்தர விடுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களை அங்கே வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருப்பதாக தகவல் பரவியது. இவர்களில் பலரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.  ஒரு எம்.எல்.ஏ.வை காணவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதிகளில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள்,  தாங்கள் சுயவிருப்பத்துடன் மகிழ்ச்சியுடன் விடுதியில் தங்கியிருப்பதாகவும் எங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களுக்கு போன் செய்து அவர்கள் பக்கம் வரச் சொல்வதால் செல்போனை அணைத்து வைத்திருப்தாகவும் கூறினர்.

அதோடு, கவர்னரின் அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து தங்களது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்கள்.

 

 

More articles

Latest article