சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த , போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலை யத்தில் இருந்து சசிகலாவை உடனே வெளியேற்றக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் கலாதேவி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், மறைந்த தமிழக முதல்வர் வாழ்ந்து வந்த வேதா நிலையம் வீட்டிலிருந்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு மற்றும் அவரது கார் மற்றும் உடைமைளை சசிகலா தரப்பினர்  பயன்படுத்தி வருகிறது. இது பொது மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளம்பி உள்ளது.

சசிகலாவுக்கு  எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லாம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.