திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை என்ற ஊரில் இயங்கிவரும் ராமா ஸ்பின்னிங் மில்லில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, ஆறு பெண்கள் இணைந்து, சமூகநலத்துறை அலுவலருக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பெண்கள் எழுதியுள்ள கடிதத்தில்,  1437142812-5936“எங்களது ஆண் மேற்பார்வையாளர், எங்கள் மீது வேண்டுமென்றே விழுவான்.  எங்களை இறுக கட்டி அணைப்பான், மார்பகங்களை தொட்டு, பிழிவான்.
எந்தப் பெண்ணாவது அவனுடைய செயல்களுக்கு மறுப்பு தெரிவித்தால், சம்பளத்தை குறைப்பான்.
எங்களுக்கு இந்த வேலை மிகவும் அவசியம். தினம் தினம் நடக்கும் இந்த அத்துமீறலை யாரிடம் முறையிடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. தயவு செய்து உதவுங்கள்” என்று போகிறது அந்த கடிதம்.
மேலும், “ராமா மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறோம். எங்களை தரக்குறைவான பேசுகிறார்கள்.  எங்களுடன் பணிபுரியும் ஆண்களும்கூட பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார்கள். இதெல்லாம் நிர்வாகத்து தெரிந்தே நடக்கிறது.
சம்பளத்தை குறைப்பது குறித்தோ பணிநேரத்தை அதிகமாக்குவது குறித்தோ நாங்கள் கவலைப்படவில்லை. பாலியல் அத்துமீறல்களைத்தான் எங்கள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது பற்றி எங்கள் பெற்றோரிடமும் பேசமுடியவில்லை. ஒவ்வொரு நாளும்  பயந்து, பயந்து வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்”  என்கிறது அந்தக் கடிதம்.
இது குறித்து, பெண்களுக்கான தமிழ்நாடு டெக்ஸ்டைல் அனைத்து மற்றும் பொது பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ். திவ்யராகினி “வேலையை விட்டு விலகும்போதுதான் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வழக்கம். இதுபோன்ற அத்துமீறலை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதத்தைப் பெறுவது இதுதான் முதல் முறை” என்கிறார்
ராமா மில் நிர்வாகமோ, “குறிப்பிட்ட மேற்பார்வையாளர் மீது ஏற்கனவே ஒரு பெண் புகார் கொடுத்திருந்தார்.  அதற்கான ஆதாரம் இல்லாததால் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கிவிட்டு, மேற்பார்வையாளரை எச்சரித்தோம். மேற்படியான கடிதம் பற்றி எதுவும் தெரியாது” என்கிறது.
திண்டுக்கல் சமூக நலத்துறை அலுவலர் ஜி. சாந்தியிடம் இது குறித்து கேட்டபோது, “எங்களுக்கு வந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குழு  ஒன்றை அமைத்திருக்கிறோம்” என்றார்.
விண்வெளி வீராங்கனையாக, எல்லையை பாதுகாக்கும் வீராங்கனையாக பெண்கள் வந்துவிட்டாலும்,  சில ஆண்களின் காமக்கணைகளில் இருந்து அப்பாவிப்பெண்கள் தப்பிக்க முடிவதில்லை என்பதற்கு சோகசாட்சியாக இருக்கிறது அந்த கடிதம்.
நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்