டில்லி:

லைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி எதிர்த்து சில வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் இன்று உச்சநீதிமன்றம் வெளியே போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான முகாந்திரம் இல்லை என்று கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நேற்று பாப்டே தலைமையிலான உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழுவினர் தீர்ப்பு வழங்கியது.

‘இதுகுறித்து கூறிய புகார் அளித்த பெண், உச்சநீதிமன்ற விசாரணைக் குழு, தலைமை நீதிபதிக்கு நற்சான்று அளித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருந்தார்.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்புக்கு, சில வழக்கறிஞர்களும், பெண்கள் அமைப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காலை திடீரென உச்சநீதி மன்றம் வெளியே  மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் உச்ச நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று மாலை வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.