டில்லி:

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே நடைபெற்ற ஊழல் புகாரைத் தொடர்ந்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்ட்டனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்காக லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

ராகேஷ் அஸ்தானாவுக்காக மனோஜ் பிரசாத் என்ற துபாயைச் சேர்ந்த இடைத்தரகர் லஞ்சப் பணத்தைப் பெற்றதாக ஹைதராபாத்தை சேர்ந்த சதீஷ் சனா குற்றம் சாட்டியிருந்தார். மொகின் குரேஷி என்ற தொழிலதிபரை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ராகேஷ் அஸ்தானாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில்  சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக,  குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ் பிரசாத் மற்றும் புகார் அளித்த சானா சதீஷ் பாபு ஆகிய இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்னேற்றம் இருப்பதாக  சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால், பாலி கிராஃப்ட் சோதனை செய்யலாம் என்று  சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதையடுத்து ராகேஷ் அஸ்தானாமீது குற்றம் சாட்டியவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.