மதுரை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறையினர், அவரது  மதுரை வீட்டுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினார். அவரது வீட்டில் இருந்து போன், டேப்லாப் உள்பட பல ஆவணங்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுக  ஆட்சியின்போது, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவருக்கும், நாடோடி படப்புகழ்  நடிகை சாந்தினியும், திருமணம் செய்யாமலேயே குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் கணவன், மனைவியாக வசித்து வந்ததால், சாந்தினி 3 முறை கருவுற்றதாகவும், அவற்றை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், ஆனால், திருமணம் செய்ய மறுத்து, மிரட்டுகிறார் என  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், அவரது முன்ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டதால், அவரை 2 நாள் போலீஸ்காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டனை சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதுடன்,  அடையாறு போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேர் கெர்ண்ட குழுவினர்ல, மணிகண்டனின் மதுரை வீட்டுக்கு  அழைச்சென்றனர்.

இன்ற காலை 8 மணியளவில் மதுரை அண்ணா நகரில் உள்ள மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் சுமார் ஒன்றரை மணி நேரம் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரது உறவினர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடந்தது. பின்னர் அவரது வீட்டில் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது போன் மற்றும் லேப்டாப் உள்பட பல்வேறு ஆவனங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, அவரை சென்னை அழைத்து வருகின்றனர். போலீஸ் காவல் இன்று மாலையுடன் முடிவடைவதால், மாலை 6 மணிக்குள் புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவர் சென்னை அழைத்து வரப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.