சென்னை

தீபாவளியை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாளை தீபாவளி பண்டிகை நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  மேலும் சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் இருந்து கடந்த வியாழன் கிழமை முதலே ஏராளமானோர் பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் இருந்து தென்மாவட்ட மக்கள் பயணிக்கும் வகையில் பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கடந்த 9-ந்தேதி முதல் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை விட 1,895 சிறப்பு பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 9-ந்தேதி 2 ஆயிரத்து 734 பேருந்துகள் இயக்கப்பட்டு இன்றும் பேருந்துகளில் பயணிக்கக் காலை முதலே பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேற்று மலை முதலே கோயம்பேட்டு முதல் பெருங்களத்தூர் வரையில் வழக்கத்தைவிடப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றது. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரவேண்டிய காலதாமதாகவே வந்தது.

, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையினர் பயணிகளின் உடைமைகள் மற்றும் பேருந்துகளில் பட்டாசு எடுத்துச் செல்வதை தவிர்க்கும் வகையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்., டிரோன் மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடனும் தீவிர சோதனை நடைபெறுகிறது.. தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.