ரியோ டி ஜெனிரோ

அமேசான் காடுகளில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி ஏற்படலாம் என அச்சம்  நிலவுகிறது. 

Aerial Photography – The River

அமேசான் காடுகள் உலகின் நுரையீரலாகச் செயல்படுகின்றன.  உலக மக்கள் வெளியிடும் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுகளை சுத்திகரித்து ஆக்சிஜன்  உற்பத்தி செய்து பெரும் தொண்டாற்றி வருகிறது.இந்த அமேசான் மலைக்காடுகளின் 60 சதவீதப்பகுதி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் காடுகளில் பருவநிலை மாற்றம் காரணமாகக் காட்டுத்தீ பரவியது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத்தீ காரணமாகக் காடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகி அவ்வப்போது பெய்யும் மழையும் பொய்த்துப் போனது. அங்குள்ள அணைகள் உள்ளிட்ட நீர்த்தேக்க நிலையங்களின் கொள்ளளவு குறைந்து வருகிறது.

ஆகவே வரும் காலங்களில் அங்கு வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் பூர்வ பழங்குடிகள் உள்பட 5 லட்சத்திற்கும் அதிகமான பிரேசில் மக்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 166 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நீர்நிலைகளைப் பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.