மஸ்தூங்.  பாகிஸ்தான்

பாகிஸ்தான்  நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள் பாகிஸ்தான் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடி இருந்தனர்.  அப்போது அக்கு திடீரென ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன  படுகாயம் அடைந்தோரில் பலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை நடத்து வருகிறது.  இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை..  இரண்டாம்  முறையாக இம்மாதத்தில் இதே மாவட்டத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.