டெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 7வது நபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரம்பிய வாகனத்தை கொண்டு மோதி, தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.  தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை இன்னமும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. பிலால் அகமது குச்சே என்ற அந்த நபர் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது. இதன் மூலும்  இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.