சென்னை

செந்தில் பாலாஜிக்கு 26 ஆம் முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வழக்கில் தனது வாதங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் கோரினார். நீதிபதி இதனை ஏற்று, வழக்கு விசாரணையை 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இன்றுடன், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக அவர் முன்னிறுத்தப்பட்டார். நீதிபதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இத்துடன் 26 ஆம் முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.