லக்னோ:

உ.பி.யில் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்ட  காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு தெரிவித்துஉள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில்  சாலையோரம் வியாபாரம் செய்து வரும் காஷ்மீர் வியாபாரிகளை, இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொட்ர்பான புகாரின் பேரில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு உள்ளான காஷ்மீரிகள் மீண்டும் தங்களது வியாபாரத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான காஷ்மீரிகளை உ.பி. மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய மாதர் சங்கத்தினர் அழைத்து பேசி, அவர்களை தங்களது மாவட்டத்தில் வியாபாரம் செய்ய அழைத்துள்ள னர். மேலும் அவர்களிடம் இருந்த உலர் பழங்கள் போன்ற பொருட்களையும் வாங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான சுபாஷினி அலி பாராட்டு தெரிவித்து உள்ளார்.