சென்னை: தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

செல்வபெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்துள்ளதுடன்,  காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், வருமானத்துறையினர்  சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை செல்வபெருந்தகை இன்று   வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனக்கு   தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக ஆதாரங்களை வெளியிட்ட்டார். அப்போது,  தனக்கு  தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடைபெற்றதாகவும், அவற்றை ஊடகங்களில் ஏன் அறிவிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியதுடன், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நடத்தியற்கான  புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து,  “இந்தப் புகைப்படங்களில் இருப்பவர்களெல்லாம் யார்? எந்த அதிகாரிகள்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவர்கள் சோதனை செய்யவே இல்லை என உண்மையை மறைக்கிறார்களே. என் மீது புகாரும் கொடுக்கின்றனர். இப்போது இந்த புகைப்படங்களையும் வன்தட்டையும் (Hard Disk – ஹார்ட் டிஸ்க்) நான் ஒப்படைக்கிறேன்.

நீங்கள் சோதனை செய்வது தவறு கிடையாது. சோதனை மேற்கொண்டதை மக்களிடமோ பத்திரிகையாளர்களிடமோ தெரிவித்தீர்களா? ஏன் தெரிவிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் இருக்கிறது? இந்த அதிகாரிகளெல்லாம் யார்? காவல்துறை ஏன் நிற்கின்றனர்?

அதிமுக, அமமுக, பாமகவினர் வீட்டிலெல்லாம் எவ்வளவு சோதனை செய்திருக்கிறீர்கள்? எவ்வளவு கைப்பற்றினீர்கள்? எத்தனை இடங்களில் சோதனை செய்தீர்கள் என வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

வீட்டில் IT Raid! பிரசாரத்துக்கு செல்ல விடாமல் சிறைபிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குமுறல்…

பொய்யான தகவல்: செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார்

[youtube-feed feed=1]