இசையமைப்பாளரர் ஜி.வி.பிரகாஷ் நடிகராவும் ஜொலிக்கிறார். அவரது நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது செல்ஃபி.
வர்ஷா பொல்லம்மா, கவுதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் இடைத் தரகர்கள் பற்றிய கதை. புதிய கதைக்களத்துக்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
கல்லூரி மாணவரான ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக இந்த இடைத்தரர்கள் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு மோதல் ஏற்படுகிறது.
இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை சுமக்கிறார். இயல்பான அவரது நடிப்பு ஈர்க்கிறது.
கல்லூரியில், மாணவரை சேர்க்க ஜிவி பிரகாஷ் செய்யும், இடைத்தரகர் வேலைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அவருக்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லை.
இரண்டாம் பாதியில், கவுதம் மேனன், கதையை நகர்த்துகிறார். அதிரடியான நடிப்பு. அதுவும் இறுதிக் காட்சியில் லுங்கி அணிந்து, கத்தியோடு களத்தில் இறங்கும் காட்சி மாஸ்.
படம் முழுதும் சண்டைக் காட்சிகள் அசத்துகின்றன.
ஊர்க்காரன் பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் சிறப்பு.
ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.
இன்றைய சூழலுக்கு அவசியமான திரைப்படம்.