இந்திய தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரின் காலியிடங்களை மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த சமயத்தில் அனுப் சந்திர பாண்டேவின் ஓய்வு மற்றும் அருண் கோயலின் திடீர் ராஜினாமா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் கூட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.

சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலின் கீழ் உள்ள உள்துறைச் செயலாளர் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயலர் அடங்கிய குழு இரண்டு பதவிகளுக்கும் தலா ஐந்து பெயர்களை முதலில் பட்டியலிட உள்ளது.

பின்னர், பிரதமர் தலைமையில் ஒரு மத்திய அமைச்சரும், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இரண்டு நபர்களை தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்து அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பார்கள்.

உறுப்பினர்களின் வசதியைப் பொறுத்து மார்ச் 13 அல்லது 14 ஆம் தேதிகளில் தேர்வுக் குழு கூடும் என்றும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் நியமனங்கள் செய்யப்படலாம் என்றும் ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது : கார்த்தி சிதம்பரம் எம்.பி.