சென்னை: நடிகர் சூர்யா நடத்து வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையில் சிக்கிய உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் எதிர்ப்பு குறித்து சூர்யாவுக்கும் சப்போர்டாகவும், அதே வேளையில் வன்னியர் சங்க சின்னம் குறித்து பாமகவுக்கு ஆதரவாக பேசி, சூர்யாவுக்கு எதிகராகவும் கருத்து தெரிவித்து டபுள் கேம் ஆடியுள்ளார். இது மேலும் சர்ச்சையை தூண்டி உள்ளது.

சூர்யாவை உதைப்பனுக்கு ரூ.1 லட்சம் தருவேன் என்று சொன்னவனை உதைத்தால் தான் ரூ.1 லட்சம் தருவேன் என்று கூறி, சூர்யாவுக்கு ஆதரவாளர் போலவும், அதே நேரத்தில் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் தீச்சட்டி இடம்பெற்றது குறித்தும் பேசி மற்றொருபுறம் பாமகவுக்கு ஆதரவாளராகவும் காட்டிக்கொண்டுள்ளார் சீமான். சீமானின் இரட்டை வேடம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் சூர்யா குடும்பத்தினர் தயாரிப்பில் அவர் நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள  ‘ஜெய் பீம்’ படம் ரிலீஸ் ஆனதிலிருந்தே  சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில், இருளர் இன மக்களின் பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அதே நேரத்தில், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ஒரு சமூதாயத்தை குறிப்பிட்டு சொல்வது போல இருப்பதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. படத்தில் காணப்பட்ட அக்னி கலசம் என்பது பொதுவாக வன்னியர்களை குறிக்கும் முத்திரை.  இந்த அக்னி கலசம் முத்திரை கொண்ட காலண்டர் அந்த போலிஸாரின் வீட்டில் இருந்தது பாமகவினரை கொந்தளிக்க செய்தது. இதையடுத்து, வன்னியர் சங்க பிரமுகர் ஒருவர்,  சூர்யாவை அடித்தால் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து அவரது குடும்பத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இப்படம் பெரியளவில் பிரச்சனையினை எதிர்கொண்டு இருக்கிறது.

இதற்கு முக்கிய உண்மையான கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது என்று கூறிவிட்டு , போலீசின் உண்மையான பெயரை மாற்றி குரு என்று வைத்தும், அவர் வீட்டில் காலண்டரை வைத்து வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது போல சித்தரித்துள்ளது காரணம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் என்று  சொன்னவரை எட்டி உதையுங்கள் நான் 1 லட்சம் தருகிறேன் என்று கூறிய பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த சில நொடிகளில், ஜெய் பீம்’ படத்தில் ஏன் அக்னி கலச முத்திரையை வைக்க வேண்டும், உலகத்திற்கே தெரியும் ‘அக்னி கலசம்’ வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது. அதை ஏன், ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும்..? அந்த அக்னி கலசத்தை படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்ரோஷமாக பேசும் சீமான் பல விஷயங்களில் உளறுவது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தற்போது கொந்தளிப்பாக காணப்படும் ஜெயப்பீம் படப்பிரச்சினையில்,  தீச்சட்டி காட்சி குறித்து பேசி பாமகவுக்கு ஆதரவாக தன்னை காட்டிக்கொண்டதுடன், மற்றொரு புறம் சூர்யாவை உதைப்பேன் என்று கூறியவரை உதைத்தான் தான் ரூ.1 லட்சம் தருகிறேன் என்று விமர்சித்து சூர்யாவின் ஆதரவாளர் போன்றும் காட்டிக்கொண்டுள்ளார்.

சீமானின் இரட்டை வேடம் சமூக வலைதளங்களில் விமர்சனமாகி வருகிறது.