கனமழை தொடர்கிறது: சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Must read

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றதழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி சென்னை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.  இதன் காரணமாக,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்பட பல மாவட்டங்களில் பலவதாக லேசானது முதல் கன மழை வரை  பெய்து வருகிறது.

இந்த தொடர் மழை காரணமாக, இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால், நாளையும் சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article