தமிழகத்தில் மணப்பெண்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், உத்தர பிரதேஷ் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநில மணப்பெண்களை தேடவேண்டிய நிலைக்கு தமிழக பிரமாண இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

30 முதல் 40 வயது வரையுள்ள சுமார் 40,000 ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பத்தில் சிரமம் உள்ளதாக தமிழ்நாடு பிராமண சங்க தலைவர் என். நாராயணன் அச்சங்கத்தின் மாதாந்திர இதழில் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது.

திருமண வயதில் உள்ள 10 ஆண்களுக்கு 6 பெண்கள் மட்டுமே உள்ளதால், தமிழகத்தை விடுத்து பிறமாநிலங்களில் இருந்தும் மணப்பெண்களை தேடும் பணியை தமிழ்நாடு பிராமண சங்கம் மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாக அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.