சென்னை:  

டதுசாரியும் இல்லை..வலது சாரியும் இல்லை இடையில் தான் மய்யமாக இருப்பதாக கமல் கூறுவது சுத்த பைத்தியகாரத்தனம் என்று சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் துவங்கிய கமல், தாம் வலதுசாரியும் இல்லை இடதுசாரியும் இல்லை, இடையில் மய்யம் எனக் குறிப்பிட்டார். இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீமான், “அப்படி ஒன்று இருக்கவே முடியாது…அது சுத்த பைத்தியகாரத்தனம்” என்று காட்டமாக  விமர்சித்தார்

கமல்ஹாசன் கட்சி துவங்கும் முன், அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். சீமானையும் நேரில் சந்திக்க கமல் விரும்பினார்.,   சீமானோ, கமல்ஹாசன் வீட்டுக்கு நேரில் சென்று தமது வாழ்த்தை தெரிவித்தார். அப்போது, மூத்தவரான கமல்ஹாசனை நான் நேரில் சென்று சந்திப்பதுதான் பண்பாடு என சீமான்  தெரிவித்தது  குறிப்பிடத்தக்கது