சென்னை:

மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான நீலப் மிஸ்ரா சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையாளர் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் நீலப் மிஸ்ரா. 1988-91 கால கட்டத்தில் பீகார் மாநில பியூசிஎல் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே நீலப் மிஸ்ரா காலமானார்.

நீலப் மிஸ்ரா, பத்திரிக்கையாளர், எழுத்தாளர்,  சமூக போராளி என பண்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். இவர் டெக்கான் ஹெரால்டு,  அவுட் லுக், பத்திரிக்கைகளில் பிரதமர் மோடியின் அரசை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பரபரப்பான பல கட்டுரைகள் எழுதியவர்.

அவரது உடலை பீகார் வரை எடுத்து செல்ல முடியாத நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.