டில்லி

கொரோனா வைரஸ் தாக்கி உள்ள சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றி வந்த  இரண்டாவது சிறப்பு விமானம் டில்லி வந்தது.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று முதலில் கண்டறியப்பட்டது.   இதையொட்டி அந்த நகரம் தனிமைப்படுத்தப்பட்டது.   ஆயினும் கொரோனா வைரஸ்  சீனா முழுவதும் பரவி உலகில் சுமார் 22 நாடுகளில் பரவி உள்ளது.  இதனால் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்துள்ளது.

இந்த நகரில் பல இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.   அவர்களை அழைத்து வர அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.   இதில் முதல் விமானம் நேற்று 324பயணிகளுடன் இந்தியாவை வந்தடைந்தது.

இன்று இரண்டாம் சிறப்பு விமானமான ஜம்போ 747 விமானம் வுகான் நகரில் இருந்து இன்று அதிகாலை 3.10 மணிக்குக் கிளம்பியது.  அந்த விமானம் தற்போது டில்லி நகரை வந்து அடைந்துள்ளது.  இதில் இந்தியாவைச் சேர்ந்த 323பேரும் 7 மாலத்தீவை சேர்ந்தவர்களும் உள்ளனர்.