செங்கல்பட்டு:
மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளான கல்பாக்கம், கோவளம், போன்ற கடலோர பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் எதிர்பாராத மழை பெய்து கடலின் நீர்மட்டம் உயர்ந்ததால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றம் காரணமாக ஒன்றொடென்று மோதி சேதம் அடைந்துள்ளது.

அதனால் அப்பகுதி மீனவர்கள் படகினை டிராக்டர் மூலம் இழுத்துச் சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடல் சீற்றத்துடன் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென காவல்துறை மற்றும் கடலோர காவல்படை அறிவித்துள்ளது. விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.