சென்னை:
விக்ரம் படத்தின் சர்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கி அதற்காக மன்னிப்பு கேட்க கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் “விக்ரம்” படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிந்த நிலையில் படம் வருகிற ஜூன் -3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் தயாரிக்க, அவர் நடித்த பழைய “விக்ரம்” படத்தின் தலைப்பே இந்த படத்திற்கும் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதினங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தில் இடம் பெற்ற ‘பத்தல பத்தல’ பாடலின் லிரிகள் வீடியோ வெளியானது. இதில் கமல் குத்தாட்டம் ஆடியிருந்தது ரசிகர்களை வியக்க வைத்தது. இந்த பாடலை கமல் ஹாசனே எழுதி இருந்தார். பாடலில் ஒன்றிய அரசை தாக்கி வரிகளும் இடம்பெற்றிருந்தது.

கமலின் ‘விக்ரம்’ படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் விவகாரம் தொடர்பாக, ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. சர்ச்சைகுறிய வரிகளை 2 நாட்களில் நீக்கி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை சென்னையை சேர்ந்த ஆர்.டி.ஐ செல்வம் என்பவர், வழக்கறிஞர் சரிதா மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.