தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

Must read

தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் நாள்தோறும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு ஒரு நாளுக்கு 5 பிரிவுகளில் மின் உற்பத்தி செய்ய 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

இந்நிலையில் கோடைகால மின்சார தேவைக்காக 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 5 பிரிவுகளிலும் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது நிலக்கரி கையிருப்பு இருந்தும், 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article