திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நண்பகல் இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் தலைநகர் கொழும்புவில் இருந்து தென் கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவில் நன்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  ஆயினும் இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் குவிந்துள்ள நிலையில், பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.