‘தளபதி 63’ தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய screen scene நிறுவனம்…!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து , அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 63’ இன்னும் பெயர் வைக்க படாத இந்த படத்திற்கு விஜய் பிறந்த நாள் அன்று வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையில் படத்தில் விஜயின் பெயர் பிகில் என்பதாக கசிந்திருக்கிறது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த பெயர். ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடம் பிகில் எனும் பெயரை பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி மிகப்பெரும் விலைக்கு வாங்கியிருந்தது. இந்நிலையில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான screen scene நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: nayanthara, screen scene, sun tv, Thalapathy 63, vijay
-=-