தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், அதை தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.

கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.

1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார். இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். நடிகர் கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது.

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ளது. கிரேசி மோகனின் இந்த மறைவு தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும்.