நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், சற்று நேரத்திற்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு வயது 66.

நடிப்பு மற்றுமல்லாமல் பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் கிரேஸி மோகன், மேடை நாடக உலகில் பிரபலமானவராக திகழ்ந்தவர் இவர்

’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கும் கிரேஸி மோகன் சற்று நேரத்திற்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார் . தமிழ் திரையுலகினர் அனைவரும் அவர் நலமுடன் திரும்பி வர பிரார்த்தித்து வருகின்றனர்.