சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்  என்றும்,  மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம் என கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், கடும் வெயில் காரணமாக , பள்ளிகள் திறப்பது தாமதாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், தற்போது தமிழ்நாட்டில் வெயில் குறைந்து கோடை மழை காரணமாக குளிர்வான கால நிலை நிலவுவதாலும்,   ஜூன் மாதம் 4-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான உடன் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும்  பள்ளிகள் வரும் ஜூன் 6-ந்தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2024-25-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 6-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.