செனனை: திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு 23ந்தேதி அதிகாலையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை  மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கல்வித்துறை  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சுகாதாரத்துறை வெளியிட்டது.

இந்த நிலையில், இன்று திருச்சியில்   செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே திட்டமிட்டபடி, செப்-1ஆம் தேதி முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மதுரையில் அமைக்கப்படுவது போல திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…