தள்ளுவண்டியில் இட்லி- தோசை விற்கிறார் பள்ளிக்கூட முதல்வர்..

Must read

தள்ளுவண்டியில் இட்லி- தோசை விற்கிறார் பள்ளிக்கூட முதல்வர்..
உயிர்கள் பறிக்கும் கொரோனா நிறைய பேரின் வேலைக்கும் உலை வைத்துள்ளது.
அவர்களில் ஒருவர், ராம்பாபு.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணி புரிந்து வந்தார்.
ஊரடங்கால் ராம்பாபு வேலை பார்த்து வந்த பள்ளியை மூடி விட்டார், பள்ளி நிர்வாகி.
’’ பள்ளி நாளை திறக்கும்.. நாளை மறுநாள்  திறக்கும்’’ என்று கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தார்,
பள்ளி திறப்பதற்கான அறிகுறி தென்படாததால், வயிறு வளர்க்க , தள்ளுவண்டியில் இட்லி, தோசை, வடை விற்கும் ஓட்டல் தொழிலைத் தொடங்கியுள்ளார், ராம்பாபு.
மனைவியும் அவருக்குத் துணையாக இருக்கிறார்.
‘’கல்வி போதிப்பதைத் தவிர வேறு வேலை தெரியாத என்னைப் போன்ற பலரும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். அரசாங்கம் என் போன்றவர்களுக்கு உதவ வேண்டும்’’ என்று தெலுங்கானா முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், பள்ளிக்கூட முன்னாள் முதல்வர் ராம்பாபு.

More articles

Latest article