விவசாயத்தில் இறங்கிய  வில்லன் நடிகர்..
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால், சினிமா நட்சத்திரங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் மும்பையில் உள்ள இல்லத்தில் தான் மற்றவர்கள் போல் முடங்கி இருந்தார்.
அப்போது நவாசுதீனுக்கு வரிசை கட்டி பிரச்சினைகள் வந்தன.
விவாகரத்து கேட்டு மனைவி நீதிமன்றம் சென்றார்.
கேன்சர் பாதித்த சகோதரி இறந்து போனார்.
அம்மாவுக்கு உடல் நிலை மோசமானது.
ஷுட்டிங்கும் இல்லை.
மன அமைதிக்காக உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான புதனாவுக்கு, ஜாகையை மாற்றினார், சித்திக்..
அங்கு அவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
தலையில் துண்டை கட்டிக்கொண்டு, மண்வெட்டியை தூக்கி தோளில் வைத்து, வயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்.
‘’ நடிப்புக்கு அடுத்த படியாக எனக்கு பிடித்த தொழில் விவசாயம் தான்’’ என்று சொல்லும் நவாசுதீன் சித்திக், தான் வயலில் வேலை செய்யும் காட்சியை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு,’’ நல்லா இருக்கா?’’ என்று அபிப்ராயம் கேட்டுள்ளார்.