போற்றவேண்டிய உண்மையான ஹீரோ.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்..
மே.வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்த கை ரிக்ஷாகாரர் ஹரியின் மனைவி பண்டினி வயிற்று வலியால் துடித்ததால், அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பண்டினிக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என பயந்த டாக்டர்கள், அவரை தொடக்கூட இல்லை.
’’வேறு மருத்துவமனைக்கு அழைத்துப்போ’’ என இரக்கமின்றி டாக்டர்கள் விரட்ட, மனைவியின் அவஸ்தையை பார்த்த ஹரி, ஒரு வாடகை சைக்கிளில் மனைவியை ஏற்றி பறந்தார்.
பக்கத்து மாநிலமான ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் போய் நின்றது, சைக்கிள்.
இடைப்பட்ட தூரம்- நூறு கிலோ மீட்டர்.
அந்த மருத்துவமனைக்கு ஹரி, ஏற்கனவே மனைவியுடன் வந்துள்ளார்.
பண்டினியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு குடல்வால் நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக அவருக்கு ஆபரேஷன் நடத்தி குணப்படுத்தியுள்ளனர்.
இலவச ஆபரேஷன்.
இதனை நடத்திய டாக்டர் சிங்’’ எனது சின்ன வயதில், நோயில் அவதிப்பட்ட எனது தந்தை சரியான சிகிச்சை இன்றி இறந்து போனார். நான் டாக்டர் ஆனதும் ‘’ பணம் இன்றி யாராவது என்னிடம் சிகிச்சைக்கு வந்தால் இலவசமாக மருத்துவம் செய்வேன்’’ என என் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்தேன். அந்த சத்தியத்தை இன்று வரை காப்பாற்றுகிறேன்’’’ என உணர்ச்சி வசப்பட்டார்.
அது மட்டுமல்ல.
 ஓசி வைத்தியம் செய்த டாக்டர் சிங், வாடகை சைக்கிளில் வந்த ஹரிக்கு புது சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கி, அவரை திக்குமுக்காட செய்து விட்டார்.
– பா.பாரதி