டெல்லி: உயர்கல்விக்கான ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள் என நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை திருத்த மசோதா, 2024 மற்றும் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணை திருத்த மசோதா, 2024 ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பிப்ரவரி 6ந்தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாப்படி,   ஒடிசா மற்றும் பழங்குடியினர் பட்டியலில் பல புதிய சமூகங்களை சேர்ப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது. மேலும், . ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களின் ST பட்டியல்களில் தற்போதுள்ள பழங்குடியினரின் ஒத்த சொற்கள் மற்றும் ஒலிப்பு மாறுபாடுகளைச் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக ஏழு பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (பிவிடிஜிக்கள்) (எஸ்டிகளின் துணைக்குழு) – ஒடிசாவில் நான்கு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று – தனித்தனியான பெயர்கள் ஏற்கனவே ST பட்டியலில் உள்ள சமூகங்களின் இணை அல்லது துணை பழங்குடியினராக சேர்க்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மக்களவையில்  கருத்து தெரிவித்துள்ள SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு , AIIMSல் உள்ள SC/ST வகுப்பினரின் வாய்ப்புகளை மேம்படுத்த, தேர்வுக்குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும், “இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை AIIMS, IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு “தகுதியற்றவர்கள்” என எந்த காரணமும் இன்றி வேண்டுமென்றே அறிவிக்கப்படுகிறார்கள். இது தேர்வுக் குழுக்களின் பாரபட்சம், சார்பு நிலையை வெளிக்காட்டுகிறது. போதுமான எண்ணிக்கையில் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்ற அரசாங்கத்தின் “பொதுவான” பதிலை ஏற்க விரும்பவில்லை” என்று குற்றச்சாட்டியுள்ளது.

ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எவரும் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, AIIMSல் உள்ள SC/ST வகுப்பினரின் வாய்ப்புகளை மேம்படுத்த, தேர்வுக்குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.