டில்லி

லகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி யை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முனீஸ்வர் நாத் பண்டாரி  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி ஆவார்.  இவர் 1983 ஆம் ஆண்டு தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டவர் ஆவார்.  இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல பிரபல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

கடந்த 2007 ஆம் வருடம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  பிறகு 2008 ஆம் ஆண்டு அவர் அதே உயர்நீதிமன்றத்தில் நிரந்த நீதிபதி ஆனார்.  கடந்த 2019 மார்ச் முதல் பண்டாரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.  இவர் தற்போது அலகாபாத் தலைமை நீதிபதியாகப் பதவியில் உள்ளார்.

உச்சநீதிமன்ற கொலிஜியம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து  முனீஸ்வர் நாத் பண்டாரியைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப் பரிந்துரை அளித்துள்ளது.    விரைவில் அவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.