தென் ஆப்ரிக்க சுற்றுப்பயண இந்திய ஏ கிரிக்கெட் அணி விவரம் வெளியானது.

Must read

மும்பை

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய ஏ அணி விவரம் வெளியாகி உள்ளது.

இந்திய ஏ கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில்  சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தில் இந்திய ஏ அணி தென் ஆப்ரிக்க ஏ அணியுடன் 3 நான்கு நாள் பந்தயங்களில் போட்டியிட உள்ளது.  இந்த போட்டிகள் நவம்பர் 23முதல் 26 வரை   நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை மற்றும் டிசம்பர் 6 முதல் 9 வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் புளோயெம்ஃபொண்டின் நகரில் நடைபெறுகிறது

இதற்கான இந்திய ஏ அணி தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 1. பிரியங்க் பஞ்சால் (தலைவர்)
 2. பிரித்வி ஷா
 3. அபிமன்யு ஈஸ்வரன்
 4. தேவ்தத் படிக்கல்
 5. சர்ஃபரஸ் கான்
 6. பாபா அப்ராஜித்
 7. உபேந்திர யாதவ் ( விக்கெட் கீப்பர்)
 8. கே கவுதம்
 9. ராகுல் சாஹர்,
 10. சவுரப் குமார்
 11. நவ்தீப் சைனி
 12. உம்ரான் மாலிக்
 13. இஷான் போரெல்
 14. அர்ஸான் நக்வாஸ்வாலா

ஆகியோர் ஆவார்கள்.

இதில் பாபா அப்ராஜித் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

Latest article