டில்லி

ச்சநீதிமன்றம்  சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிக்கத் தடை விதித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.   இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளன.    இந்த நேரக் கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதில் பல கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.

அவை பின் வருமாறு

சரவெடிகள் உற்பத்தி செய்யவோ, விற்கவோ மற்றும் வெடிக்கவோ கூடாது.

பேரியம் நைட்ரேட் மூலம் பட்டாசு தயாரிக்கவோ விற்கவோ கூடாது.

காவல்துறையினர் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் அதற்கான  பொறுப்பை ஏற்க வேண்டும்.

போலி பசுமை பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால் அந்த உற்பத்தியாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவு கட்டாயம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

மாநில அரசுகள் பட்டாசுகள் தொடர்பான இந்த உத்தரவை ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்

என உத்தரவிடப்பட்டுள்ளது.