ஏமன் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களின் பட்டியலை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சவுதி வெளியிட்டுள்ள 25 பெயர்களை கொண்ட பட்டியலில் சிரஞ்ஜீவ் குமார் சிங் என்ற இந்தியர் முதல் இடத்தில் உள்ளார்.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பெயரில் 10 தனி நபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் அடங்கும், இதில் சிரஞ்ஜீவ் குமார் சிங் தவிர மனோஜ் சபர்வாலா என்ற மற்றொரு இந்தியரும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்த நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி பரிமாற்றம் மற்றும் வணிகம், தொழில் ரீதியிலான பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.