ஆளுநர் தொடர்பான தனி நபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் தி.மு.க. மாநிலங்கள் அவை உறுப்பினர் வில்சன்.

மாநிலங்களுக்கு கவர்னர் என்பது ஆட்டுக்கு தாடி போல என்று அண்ணா காலம் தொட்டு தி.மு.க. கூறிவருகிறது. முதலவர் மு.க. ஸ்டாலினும் இதுகுறித்து சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் நியமன பதவியில் உள்ள ஆளுநர்கள் மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனை எதிர்த்து ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் மசோதாக்கள் மீது அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. சார்பில் வில்சன் இன்று தனி நபர் மசோதா தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 200 ல் இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மசோதாக்கள் மீது காலம் தாழ்த்தாமல் ஆளுநர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.