சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

Must read

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழக்க பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பிப்ரவரி மாதம் 12ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்து சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்  அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆகையால் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்திருந்தது. இந் நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த படந்தாலை சேர்ந்த முத்துராஜ் மனைவி வீரலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீரலட்சுமி உயிரிழந்ததையடுத்து அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்து உள்ளது.

More articles

Latest article