எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்கள் நடிகர் சசிகுமார் கைவசம் உள்ளன.

இந்நிலையில், ஏற்கனவே கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பற்றின தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த பாடத்தை தயாரிக்க உள்ளனராம். வசூல் ரீதியாகவும் கழுகு படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.